இலங்கை

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

வரிகள் செலுத்தப்படாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரொன்றை வைத்திருந்தமை மற்றும் வரி ஏய்ப்பு செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு –  கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

 

கொழும்பில் உள்ள பிரபல தனியார் விடுதியொன்றின் வாகன நிறுத்துமிடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குறித்த சொகுசு வாகனம் தொடர்பில், தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் நீதிமன்றத்துக்கு இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் தனது தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரகடனப்படுத்தவுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button