இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி – உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான தகவல்களை அவரது தரப்பு மறுத்துள்ளது.

80 வயதான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், பாரதூரமான உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் அவரது தரப்பைச் சேர்ந்த ஒருவர்  தெரிவித்துள்ளார்.

அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளியான ஊடகச் செய்திகளில் உண்மையில்லை எனவும் அந்தத் தரப்பு மறுத்துள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

இதற்கிடையில், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது வழக்கு நாளை செவ்வாய்க்கிழமை (13) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது, அவர் தாக்கல் செய்துள்ள பிணை மனு பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button