
இந்திய அமைதிப்படை நடத்திய ஈழத் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள் வரிசையில் முதல் சம்பவமாகப் பதிவாகிய கொக்குவில் கிழக்கு பிரம்படி கோரப் படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (12.10.2026) காலை-08 மணி முதல் கொக்குவில் ஆடியபாதம் வீதியிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத் தூபியடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில், தமிழ் அரசியற் கட்சிகளின் பிரமுகர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள். பொதுமக்கள், உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர்





