அரசியல்இலங்கை

லலித் – குகன் வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷவிடம் சாட்சியம் பதிவு!

சமூக ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) சாட்சியங்களைப் பதிவு செய்து கொண்டது.

இன்றைய தினத்திற்கான சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினமும் சாட்சியமளிப்பதற்காகக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button