உலகம்

இங்கிலாந்தில் தாக்குதல் நடத்தச் சதித் திட்டமா? ஐவர் கைது – ஈரான் மீது சந்தேகம்!

இங்கிலாந்தில் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் RAF Fairford ராணுவ விமான தளத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதல் நடத்தச் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி 20-29 வயதுக்குட்பட்ட 5 பிரித்தானிய இளைஞர்களைக் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று முன் தினம் 27, 2026 அன்று நள்ளிரவில் மூன்று சந்தேகத்திற்கிடமான வேன்கள் விமான தளத்தை நோக்கிச் சென்றபோது, உள்ளூர்வாசி ஒருவர் அளித்த 999 அவசர அழைப்புத் தகவலின் அடிப்படையில் இந்த உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் குளுசெஸ்டர்ஷைர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈரானின் பின்னணி ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் மற்றும் ரோபோக்கள் மூலம் அந்த வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் உள்ள வெல்ஃபோர்ட் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 85 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன் 400 மீட்டர் சுற்றளவுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. விசாரணையைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவின் தலைவர் லாரன்ஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ள லண்டனில் உள்ள ஈரான் தூதரகம், இங்கிலாந்து ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் பரப்பும் ஆதாரமற்ற ஊகங்களை முற்றிலும் நிராகரிப்பதாகக் கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதலின் போது, அமெரிக்காவின் B-1 மற்றும் B-52 குண்டுவீச்சு விமானங்கள் இந்த பேர்ஃபோர்டு தளத்தில் இருந்தே இயக்கப்பட்டது.

அதேசம்யம் , தங்களைத் தாக்கப் பயன்படுத்தப்படும் தளங்கள் இலக்குகளாக்கப்படும் என ஈரான் ஏற்கனவே எச்சரித்திருந்தது . இருப்பினும், இந்த சம்பவத்தில் ஈரான், ரஷ்யா அல்லது உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இப்போது எந்தவொரு முடிவிற்கும் வர முடியாது எனப் பிரித்தானியப் பாதுகாப்புத் துறைச் செயலர் வெஸ் ஸ்ட்ரீடிங் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button