ஜோதிடம்

இன்றைய (28.09.2026) ராசிபலன்

மேஷம்: முன்கோபத்தை தவிர்த்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கவும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கி நிம்மதி யுண்டு. அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு உண்டு. ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். அலுவலக ரீதியான பயணம் திருப்தி தரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரியாகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கடகம்: குழப்பங்கள் விலகி வீட்டில் நிம்மதி பிறக்கும். சகோதர வகை யில் சுபச்செலவு இருக்கும். உடல்நலம் சீராகும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

சிம்மம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன சுபநிகழ்ச்சிகள் முடியும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

கன்னி: திட்டமிட்ட பணியை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

துலாம்: வெளியூர் பயணம் சாதகமாகும். தடைபட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: புதிய முயற்சி வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெல்வீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

தனுசு: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். முகப் பொலிவு கூடும். வங்கிக் கடன்உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி கிட்டும். முக்கிய பிரமுகர்களால் பயனடைவீர். அலுவலக மேலதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். வியாபாரம் ஏற்றம் தரும்.

கும்பம்: மனதைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத பணம் வரும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல், செலவு இருக்கும். எதிர்பாராத பணவரவால் கவலை தீரும். உறவினர், பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரப் போட்டிகள் குறையும்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button