தமிழீழம்

வவுனியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாகி திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்

தியாகி திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (26) வவுனியாவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை வாயிலுக்கு அருகில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி வளாகத்தில் இந்த இந்நிகழ்வு நடைபெற்றது.

போராளிகள் நலன்புரிச் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஈகைச்சுடரேற்றப்பட்டு தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் அகவணக்கமும் செலுத்தப்பட்டிருந்தது.

மேலும், இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், மாநகரசபை உறுப்பினரானார்கள், போராளிகள் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button