தமிழீழம்

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட தியாக தீபத்தின் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று சனிக்கிழமை (24)  உணர்வுபூர்வமான இடம்பெற்றது.

இதன்போது தியாக திபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் முதல் சுடரை யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ஏற்றினார்.

மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவை அர்த்தமுள்ள வகையில் நினைவுகூரும் நோக்கில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button