விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்ற இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்களாதேஷ் அணியை 114 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் 196 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 15.4 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இந்தவெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்திய அணி அந்தப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button