
நீங்கள் முன்பு தமிழ் மொழியினை கற்று, இடையில் நிறுத்தி விட்டீர்களா ? இப்போது மீண்டும் முறைப்படி தமிழ் எழுதவும் படிக்கவும் ஆசையாக இருக்கிறதா? உங்களுக்காகவே சூரிச்சில் மாநிலத்தில் சிறப்புத் தமிழ் வகுப்பு (Quereinsteigerklasse) தொடங்கவுள்ளது!
வகுப்பு விவரங்கள்:
• காலம்: 22.09.2026 முதல் 15.12.2026 வரை (மொத்தம் 13 வாரங்கள்)
• நாள் & நேரம்: ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், மாலை 5:30 முதல் இரவு 8:00 மணி வரை
• இடம்: Universität Zürich Zentrum
• கட்டணம்: CHF 90.- (ஒருவருக்கு)
• இடங்கள்: 10 பேருக்கு மட்டுமே அனுமதி!
• யாரெல்லாம் இணைந்து கொள்ளலாம்: பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம் (TaVS)
உறுப்பினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும்
• தகுதி: அண்ணளவாக 5-ஆம் அல்லது 6-ஆம் வகுப்பு அளவிலான அடிப்படை தமிழ் அறிவு இருந்தால் போதுமானது.
சிறப்பம்சங்கள்:
• பாடங்கள் ‘சுவிஸ் தமிழ் கல்விச்சேவை’ (Kalvichevai) பாடப்புத்தகங்களின் அடிப்படையில் நடத்தப்படும்.
• அரைகுறையாக நின்ற உங்கள் தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சியை மீண்டும் புதுப்பிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு.
பதிவு செய்ய இறுதி நாள்: 20 செப்டம்பர் 2026
இடங்கள் மிகக் குறைவாக இருப்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே பதிவு செய்து பயன் பெறுங்கள்!
தகவல்: பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம் (TAVS)

- https://www.instagram.com/p/Dc89FHvNlP1/?stkn=ajh1cm9wd253bmt6





