
பாசெல்:
சுவிற்சர்லாந்தில் இயங்கிவரும் பாசெல் தமிழ் மன்றம் (Swiss Thamil Manram Basel) சார்பாக 18-வது ஆண்டாக நடத்தப்படும் பிரம்மாண்ட “மெய்வல்லுநர் போட்டி – 2026” வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
தமிழர்களின் விளையாட்டுத் திறனையும், இளைய தலைமுறையினரின் உடல்தகுதியையும் ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும் இப்போட்டி, இந்த ஆண்டும் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி விவரங்கள்:
• நாள்: 20.09.2026 (ஞாயிற்றுக்கிழமை)
• நேரம்: காலை 9.00 மணி முதல்
• இடம்: St-Jakob மைதானம், பாசெல்
இப்போட்டிகளில் பங்குபெற விரும்புவோர் போட்டி நடைபெறும் நாளன்று விளையாட்டு மைதானத்திலேயே நேரடியாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துத் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு ஆர்வலர்கள், போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குடும்ப சமேதராக வருகை தந்து போட்டிகளைக் கண்டு களிப்பதோடு, வீரர்களை உற்சாகப்படுத்துமாறு பாசெல் தமிழ் மன்றத்தினர் அன்புடன் அழைப்பு விடுக்கின்றனர்.
கூடுதல் தொடர்புகளுக்கு:• தொலைபேசி: 078 889 78 58





