இலங்கைஉலகம்

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்

சவூதி அரேபியாவின் மேற்குப் பிராந்தியத்தில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, அப்பகுதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகக் காரியாலயம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

தமது கைபேசிக்கு அவசர எச்சரிக்கை (National Warning Alert) கிடைத்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அவசர நிலைகளின் போது அவசர சேவை இலக்கங்களாக மக்கா மற்றும் மதீனா பிராந்தியங்களில் 911 என்ற தொலைபேசி இலக்கத்தையும், ஏனைய பகுதிகளில் 998 என்ற தொலைபேசி இலக்கத்தையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், துணைத் தூதரகக் காரியாலயத்தின் அவசரத் தொடர்பு இலக்கமான 056 098 6671 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button