
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தின் முதலாவது ‘செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு இணை அமைச்சராக’ (Associate Minister of Artificial Intelligence Adoption) தமிழீழ வம்சாவளியைச் சேர்ந்த விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொறுப்பைத் தமக்கு வழங்கியதற்காக ஒண்டாரியோ பிரதமர் டக் ஃபோர்ட்டுக்கு (Doug Ford) தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தில், அமைச்சர் விக்டர் ஃபெடேலியுடன் (Victor Fedeli) இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதார அச்சுறுத்தல்களில் இருந்து ஒண்டாரியோவைப் பாதுகாக்கும் நடவடிக்கை தொடரும் அதே வேளையில், உள்ளூரிலேயே செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஒண்டாரியோவே செயற்கை நுண்ணறிவின் பிறப்பிடம் எனக் குறிப்பிட்ட விஜய் தணிகாசலம், “ஒண்டாரியோவை கனடாவின் செயற்கை நுண்ணறிவுத் தலை நகரமாக (AI Capital) மாற்றுவோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





