
மட்டக்களப்பு சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகத்தில் 1990ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த நலன்புரி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று 22.08.2026 சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய முன்றலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஞாபகார்த்தமாகப் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன.
இந் நினைவேந்தல் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் திரு. மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான திரு.சி.வவானந்தன், திரு.த.பிரபாகரன், சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய குருக்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.





