அரசியல்இந்தியாஇலங்கை

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு திடீர் வருகை

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவால்  இந்திய வெளியுறவுச் செயலாளர் வரவேற்பளிக்கப்பட்டார்.

 

இந்த விஜயத்தின் போது, வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் ஏனைய உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 

இந்த விஜயத்தின் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள நெருங்கிய இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என்றும், தற்போது நடைமுறையிலுள்ள உயர்மட்ட தொடர்புகளின் அடிப்படையில் இருநாடுகளுக்குமிடையிலான முக்கிய ஒத்துழைப்புத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button