உலகம்சர்வதேசம்

ஹோர்மூஸ் நீரிணையில் சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்! மீண்டும் பதற்றம்

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் ஹோர்மூஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த நிலையில், அமெரிக்காவுடனான தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை நிலவி வந்த சூழலில், ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தாக்குதலுக்கு முன்னர் நிலவிய சூழல் இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. எனவே, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களும் ஈரான் அறிவிக்கும் கடல் வழியைப் பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஓமான் அருகே பயணித்த வர்த்தகக் கப்பல் ஒன்றை அடையாளம் தெரியாத ஏவுகணை தாக்கியதாகப் பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் ஒரு கப்பல் தாக்குதலுக்குள்ளாகி ஓமான் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு கப்பல்களும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகவும், எனினும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் தாக்குதல்களை நிறுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒரு வாரகால உடன்படிக்கை காலாவதியான நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button