இலங்கை

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் – ஜூலை 1 முதல் அமுல்படுத்த நடவடிக்கை

ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தத்தை ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தக் கோரி, தனியார் பஸ் சங்கங்கள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

 

 

 

இக்கோரிக்கையை நேற்று (24) எழுத்துபூர்வமாக கையளித்ததாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

 

 

 

அதன்படி, அடுத்த 5 நாட்களுக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பாக தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

 

 

 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

 

 

”ஆண்டுதோறும் அமுல்படுத்தப்படும் பஸ் கட்டணத் திருத்தம் 5 ஆம் திகதி செயல்படுத்தப்படும் என நாங்கள் முன்னதாக அறிவித்திருந்தோம். இந்த மாத இறுதியில் வரவிருக்கும் எரிபொருள் விலை மாற்றத்தை பரிசீலித்த பிறகு, எங்களின் அனைத்து சங்கங்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, பஸ் கட்டணத்தை வழக்கம் போல் ஜூலை 1 ஆம் திகதி திருத்தியமைக்க நேற்று எழுத்துபூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்தோம். மேலும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடனும் இந்த 5 நாட்களுக்குள் கலந்துரையாட முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் எங்கள் அனைத்து விலைகளையும் தெரிவித்துவிட்டோம். இருப்பினும், ஜூலை மாதத்தில் செய்யப்படும் திருத்தம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.’

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button