
தா ய்லா ந்து இளவரசி பஜ்ரகித்தியபா 4 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
47 வயதான இளவரசி, கடந்த 2022 டிசம்பர் மாதம் நகோன் ரட்சசிமா மாகாணத்தில் இராணுவப் போட்டிகளுக்காகத் தனது நாய்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து கோமா நிலைக்குச் சென்றார்.
இந்நிலையில் அரண்மனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட வயிற்றுத் தொற்றால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து பாங்காக் சுலாலோங்கோர்ன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், நேற்று இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இவர், அந்நாட்டுச் சட்டப்படி அரியணை ஏறும் தகுதி பெற்றவர்களில் ஒருவராவார்.
ஐ.நா. சபையில் பணியாற்றியதுடன், சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகளுக்காகத் தீவிரமாகப் போராடியவர்.
மேலும் இளவரசி பஜ்ரகித்தியபா உடலிற்கு பல்வேறு அரசு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி
வருகின்றனர். இந்நிலையில் இவரது இழப்பு தா ய்லா ர்து மக்களிட யே பெரும் சோகத்தை
ஏற்றப்படுத்தியுள்ளது.
மேலும், இவரது இறுதிச் சடங்கு பாங்காக் கிராண்ட் பேலஸில் மிகப் பெரிய அரசு மரியாதையுடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





