
ஹொரணை, அங்குருவாத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த இல்லத்தின் பணிப்பாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதுடன், வழக்கு ஜூன் 25-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.





