இலங்கை

நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள முதியோர் இல்லங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஜூன் மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாகக் கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த கணக்கெடுப்பின் போது, முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் 50 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காண்பதற்கும், அவர்களைப் பொருத்தமான மாற்று வசதிகளுக்கு மாற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கும் அவதானம் செலுத்தப்படும் என தேசிய முதியோர் செயலகத்தின் பணிப்பாளர் கே.சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button