உலகம்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஓபிலிப்பைன்ஸின் மிண்டானோ தீவுக்கு அருகே 33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட 7.8 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

நிலநடுக்கத்தையடுத்து சுமார் 20,000-க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்து அவசரகால முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலில் 1.4 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் பதிவானதால் கடலோர பகுதிகளில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

இதன் காரணமாக சுமார் 2,000 வீடுகள், 117 அரசு கட்டிடங்கள் மற்றும் பல அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மேலும், ஜெனரல் சாண்டோஸ் விமான நிலையம் மூடப்பட்டு, மனிதாபிமான உதவி விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button