
தற்போதைய அவசரகால சட்டம் புயல் காரணமாக கொண்டுவரப்பட்டாலும் தவறாக பயன்படுத்தப்படுவதாக இராதாகிருஷ்ணன் எம்.பி. இன்று (09) பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து, அதனால் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் டிக்கோயாவில் இரண்டு வயதானவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் சந்தேக நபர் காவலில் இருந்து காணாமல் போனது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும், சில இடங்களில் துரைமார்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் தொடர்புடையதாகவும் அவர் கூறினார்.
மேலும் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட பாடகர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், சட்டம் நியாயமாக பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





