
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 478 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 434 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 25 ரூபாயால் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் 495 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்ணெண்ணெய்யின் விலையும் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 285 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும், புதிய விலைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





