
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களுக்காக இன்று (28) பிற்பகல் 2.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், அதன் வேகம் மணிக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 55-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்புகளும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவுக்குக் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அக்காலப்பகுதியில் அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.





