
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஒரேன்ச் கவுண்டியில் (Orange County) உள்ள விண்வெளி உற்பத்தி ஆலை ஒன்றில், ‘மெத்தில் மெதக்ரிலேட்’ (MMA) என்ற நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனம் அடங்கிய இராட்சத தாங்கி ஒன்று வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 50,000 மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரேன்ச் கவுண்டியின் கார்டன் குரோவ் (Garden Grove) பகுதியில் அமைந்துள்ள ‘GKN Aerospace’ தொழிற்சாலையிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள சுமார் 34,000 கலன் கொள்ளளவு கொண்ட தாங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இரசாயனம், தற்போது அளவுக்கு அதிகமாக வெப்பமடைந்து (Thermal Runaway) வருவதால், தாங்கியின் உள்ளே அழுத்தம் அதிகரித்து அது எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, கலிபோர்னியா ஆளுநர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
6 நகரங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாங்கி வெடிப்பதைத் தடுப்பதற்காக, ரிமோட் மூலம் இயக்கப்படும் அதிநவீன நீர்த் தூவிகள் மூலம் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து தண்ணீரைப்ாய்ச்சி குளிரூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்





