இலங்கை

தென்மேற்கு பருவக்காற்று நிலைபெறுகிறது : பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த 16 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள திணைக்களம்,

 

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

 

இதனுடன், வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள் மற்றும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button