இலங்கை

குடா கங்கை, மகுரு கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் – தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கையின் கிளை நதிகளான குடா கங்கை மற்றும் மகுரு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், சிறிய அளவிலான வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட நதிப்பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button