
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
குறிப்பாக, நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது





