இலங்கை

இலங்கைக்கு வடகிழக்கே நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வளிமண்டலத் தொகுதி அடுத்த சில நாட்களில் வடக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதன் விளைவாக, நாட்டில் தற்போது நிலவும் மழைக்கால நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

இதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button