இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது மேற்கொண்டுள்ள போர் காரணமாக, வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதன் விளைவாக, உலகளாவிய எண்ணெய் கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் குறைந்து வருவதாக புளூம்பெர்க் (Bloomberg) அறிக்கை எச்சரித்துள்ளது.

மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) மதிப்பீட்டின்படி, கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 25 வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள் உலகளாவிய எண்ணெய் இருப்பு சுமார் 270 மில்லியன் பீப்பாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

 

கடந்த பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து, இதுவரை ஒரு பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது அல்லது பாதிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் இவ்வாறான பாரிய அதிர்ச்சிகளைத் தாங்கும் திறனை (Supply Shock Buffer) உலக நாடுகளும் தொழிற்சாலைகளும் இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

கையிருப்பு வேகமாகத் தீர்ந்து வருவதால், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

 

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் கடல்சார் போக்குவரத்து மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகளை முடக்கியுள்ளதே இந்த நெருக்கடிக்கு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button