இந்தியா

தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் இருந்து முன்னால் முதல்வரின் படங்கள் நீக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், விஜய் தலைமையில் புதிய அரசு அமையவுள்ளது.

 

இதனையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளை அகற்றும் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மையுடன் புதிய அரசு அமையவுள்ளதால், தலைமைச் செயலகத்தில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் தங்களது அறைகளில் பொருட்களை விரைவாக நீக்கம் செய்து வருகின்றனர்.

 

மேலும், அந்த அறைகளில் இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களையும் அகற்றி வருகின்றனர்.

 

தலைமைச் செயலகத்தைப் போலவே, அடையாறில் உள்ள அமைச்சர்களின் இல்லங்களையும் நீக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் தங்களது சொந்தப் பொருட்கள் மற்றும் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

 

 

 

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் புதிய அமைச்சர்கள், விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள இந்த அமைச்சர்களின் அறைகளைப் பயன்படுத்தவுள்ளனர்

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button