இந்தியா

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா

 

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது.

 

அவற்றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

 

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகள், புராதன பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு காலனித்துவக் காலத்தில் கடத்தப்பட்டிருந்தன.

 

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, பழங்கால அரிய பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு குறித்த நாடுகளின் அரசுகளிடம் வலியுறுத்தி வந்திருந்தார்.

 

அதன் பிரகாரம் இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 657 பழங்கால சிலைகள், அரிய பொருட்கள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரி ராஜலட்சுமி கடாமிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button