இந்தியா

விஜய்க்கு புதிய நெருக்கடி – பிரசாரத்தில் பறக்கவிடப்பட்ட புறாக்களால் வெடித்த சர்ச்சை!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, விலங்கு நல அமைப்பான பீட்டா (PETA) கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சியின் நிறங்கள் பூசப்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.

உயிருள்ள பறவைகள் மீது இவ்வாறு சாயம் பூசுவது கடும் கண்டனத்திற்குரியது என பீட்டா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது

புறாக்கள் மீது சாயம் பூசுவது அவற்றின் இறக்கைகள் மற்றும் தோலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது போன்ற செயல்கள் விலங்கு சித்திரவதை சட்டத்தின் கீழ் வரும் என்பதால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இது குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளைத் தவிர்க்க அக்கட்சி முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வரும் விஜய்க்கு, விலங்கு நல அமைப்பிடம் இருந்து இவ்வாறானதொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது

புறாக்கள் மீது சாயம் பூசுவது அவற்றின் இறக்கைகள் மற்றும் தோலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது போன்ற செயல்கள் விலங்கு சித்திரவதை சட்டத்தின் கீழ் வரும் என்பதால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இது குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளைத் தவிர்க்க அக்கட்சி முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் களத்தில் தீவிரம் காட்டி வரும் விஜய்க்கு, விலங்கு நல அமைப்பிடம் இருந்து இவ்வாறானதொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button