
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
நாளை 21 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவுறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் களமிறங்கியுள்ள கட்சிகள் தமது பிரசார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக, சென்னையிலுள்ள ஊடகவியலாளர் உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம், சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
அதன்படி இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தமது தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
அனேகமான கருத்துக்கணிப்புகள் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெரும் என்று தெரிவித்திருந்த நிலையில் மக்களிடையே வெற்றி பெற போவறு யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





