இலங்கை

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான புத்தாண்டு காலப்பகுதியில், நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் ஊடாக 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

இந்த காலப்பகுதியில் மொத்தம் 1,170,830 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அனுராத ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு வெளிச் சுற்று வீதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றில் இந்த வருமானங்கள் ஈட்டப்பட்டுள்ளன.

 

புத்தாண்டு காலப்பகுதியில் நாளாந்தம் பதிவான வருமான விபரங்கள் பின்வருமாறு:

 

ஏப்ரல் 10: 161,847 வாகனங்கள் – ரூபா 59.8 மில்லியன்

 

ஏப்ரல் 11: 153,807 வாகனங்கள் – ரூபா 58.2 மில்லியன்

 

ஏப்ரல் 12: 118,684 வாகனங்கள் – ரூபா 45.2 மில்லியன்

 

ஏப்ரல் 13: 84,211 வாகனங்கள் – ரூபா 31.6 மில்லியன்

 

ஏப்ரல் 14: 91,776 வாகனங்கள் – ரூபா 34.3 மில்லியன்

 

ஏப்ரல் 15: 139,480 வாகனங்கள் – ரூபா 52.5 மில்லியன்

 

ஏப்ரல் 16: ரூபா 53 மில்லியன் வருமானம்

 

ஏப்ரல் 17: 138,944 வாகனங்கள் – ரூபா 53 மில்லியன்

 

ஏப்ரல் 18: 141,813 வாகனங்கள் – ரூபா 53 மில்லியனுக்கும் அதிகம்

 

பண்டிகைக் காலங்களில் மக்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொண்டமையே இந்த வருமான அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button