உலகம்

கடற்படைகள் மீதான அமெரிக்காவின் முற்றுகை! வளைகுடா பிராந்திய வர்த்தகத்தை நிறுத்துவோம் – ஈரான் அதிரடி

அமெரிக்கா ஈரான் கடற்படைகள் மீதான முற்றுகையை நீக்காவிட்டால் வளைகுடா பிராந்தியத்தில் வர்த்தகத்தை நிறுத்திவிடுவோம் என்று ஈரானின் கூட்டு ராணுவ தலைமையின் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரான், அமெரிக்காவிற்கு இடையே இரண்டு வார காலத்துக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் எதிர்வரும் 22ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த சூழலில் 2ஆம் சுற்று அமைதி பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்காவும், ஈரானும் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் இடையே 2ஆம் சுற்று பேச்சுவார்த்தைக்கான திகதி இன்னும் முடிவாகவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் தொடங்கி 6 வாரங்கள் கடந்துவிட்டன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான சமீபத்தில் பாகிஸ்தான் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நிறுத்தம்
ஆனால் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு அமெரிக்கா முறையாக ஒப்புக்கொள்ளவில்லை. சமீபத்திய நடவடிக்கையாக பாகிஸ்தானின் தூதுக்குழு ஈரான் சென்றுள்ளது.

இதனிடையே ஈரானின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் எண்ணெய் போக்குவரத்து நடக்கும் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் ஈரான் துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் அந்த பகுதியில் நுழைய முடியாத சூழல் உருவாகி உள்ளது. ஈரானின் அனைத்து கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் என்று அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button