
கோரிக்கைகள் மீண்டும் அதிகரித்தன.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்பே, ஈரான் தனது அணுசக்தி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஈரான் தனது கொள்கையை இன்னும் பகிரங்கமாக மாற்றிக்கொள்ளவில்லை. இருப்பினும், ஈரான் 400 கிலோகிராமுக்கும் அதிகமான அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கொண்டுள்ளது.
கமேனியின் மகனும் ஈரானின் புதிய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் ஃபத்வாவை மாற்றினால், பல அணு ஆயுதங்களைத் தயாரிக்க அந்த அளவு போதுமானதாக இருக்கும்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி ( மறைந்த தலைவரின் இரண்டாவது மகன் ), தனது தந்தையின் அணுசக்திக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றுவாரா என்பது குறித்து இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை.
அவர் தற்போது இரகசியமாக வாழ்ந்து வருகிறார், மேலும் தனது முதல் அறிக்கையில், தன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக சூளுரைத்தார், ஆனால் அணுசக்தி திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
புதிய தலைமையின் கீழ் ஈரானின் அணுசக்திக் கொள்கை மாறுமா என்ற கேள்விக்கு பதலளித்து பேசிய, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணு ஆயுதங்கள் குறித்த புதிய தலைவரின் “சட்டரீதியான அல்லது அரசியல் நிலைப்பாடு” பற்றி தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறினார்.
“இது நமது முந்தைய கொள்கைகளிலிருந்து பெரிதாக வேறுபடாது என்பதே என் புரிதல், ஆனால் அவருடைய கருத்துக்கள் தெரியவரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பல அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான, 400 கிலோகிராமுக்கும் அதிகமான உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிடம் தற்போது கையிருப்பில் உள்ளது .
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC, தனது அணுசக்திக் கொள்கையை மாற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஈரானின் எஞ்சியிருக்கும் தலைமை, அணு ஆயுதக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற அதிகரித்து வரும் உள்நாட்டுக் கோரிக்கைகளையும் சமாளித்து வருகிறது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை தனது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டு, பழிவாங்கும் குணம் கொண்ட இளைய தலைமுறைப் போராளிகளை வழிநடத்த, கடும்போக்குடைய ஓய்வுபெற்ற தளபதிகளை மீண்டும் நியமிப்பதால் இந்த அழுத்தம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு குண்டை உருவாக்க முயன்றால், சவூதி அரேபியாவும் கூடிய விரைவில் அணு ஆயுதங்களை உருவாக்கத் தூண்டப்படும் என்று சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் முன்னதாகக் கூறியிருந்தார் .
ஈரான் ஏற்கனவே இரண்டு முறை வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருப்பதால், அது இனிமேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
தனது சொந்தப் பாதுகாப்பிற்காக ஈரான் ஒரு அணுசக்தி நாடாக மாற முற்படும் போக்கு அதிகரித்து வருவதாக சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





