உலகம்

வளைகுடா நாடுகளில் திறந்தவெளி பெருநாள் தொழுகைகளுக்குக் கட்டுப்பாடு: பிராந்திய பதற்றம் காரணமாக அதிரடி நடவடிக்கை

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் சூழல் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையைக் கருத்திற் கொண்டு, இவ்வாண்டு ஈகைத் திருநாள் (ஈத் அல்-பித்ர்) தொழுகைகளை மசூதிகளுக்குள் மாத்திரமே நடத்துமாறு வளைகுடா நாடுகள் உத்தரவிட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

வழமையாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பாரம்பரிய திறந்தவெளித் திடல்களில் தொழுகை நடத்துவதற்குப் பதிலாக, பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், திறந்தவெளி திடல்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு தத்தமது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள், திறந்தவெளி திடல்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறு தத்தமது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

 

ரமழான் மாத முடிவைக் குறிக்கும் பெருநாள் தொழுகைகள் அனைத்தும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு உள்ளேயே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்கள் மற்றும் பிராந்திய மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களின் பாதுகாப்பை மறுஆய்வு செய்த பின்னரே அரசாங்கங்கள் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button