உலகம்

ஈரானின் எரிவாயு முனையத்தை தகர்ப்போம்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

 

தனது சமூக வலைதளத்தில் இது குறித்து நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர்,

 

ஈரானின் முக்கிய எரிசக்தி மையமான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது கட்டாரோ முன்னதாக அறிந்திருக்கவில்லை. இஸ்ரேல் கோபத்தினால் தன்னிச்சையாக இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதலுக்குப் பதிலடியாக கட்டாரிலுள்ள திரவ இயற்கை எரிவாயு முனையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல் நியாயமற்றது மற்றும் அநீதியானது.

 

ஈரான் மீண்டும் கட்டார் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலின் உதவி இல்லாமலேயே அமெரிக்கா ஈரானின் முழு சவுத் பார்ஸ் எரிவாயு வயலையும் “வெடிக்கச் செய்து தகர்க்கும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

 

இத்தகைய பேரழிவைத் தான் விரும்பவில்லை என்றும், ஆனால் கட்டார் மீண்டும் தாக்கப்பட்டால் இம்முடிவை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button