இலங்கை

வானூர்தி ரத்து தொடர்பில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் புதிய அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான வானூர்தி சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதன்படி, எதிர்வரும் 16, 17, 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து துபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 விமானமும், துபாயிலிருந்து கொழும்பு திரும்பும் UL232 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான ரத்துகளால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள், மேலதிக உதவிகள் மற்றும் தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொடர்பு மையத்தை இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலும், சர்வதேச அளவில் +94 11 777 1979 என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேநேரம், பயணிகள் தத்தமது பயண முகவர்களையோ அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தையோ அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிடும் முன்னர் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் ஊடாக விமானங்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button