
டுபாய் சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அருகில் எரிபொருள் தாங்கி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், பயணிகள் மற்றும் வானூர்திப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானூர்தி நிலையத்தின் அனைத்து வானூர்திச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க டுபாய் சிவில் வானூர்திப் போக்குவரத்து ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.





