
ஐந்து தசாப்த கால வரலாற்றைக் கொண்ட இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டு, 6 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டதை எதிர்த்து மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
நேற்று (09) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று (10) பிற்பகல் 3.00 மணி வரை நீடிக்கவுள்ளது.
இந்த அடையாள பணிப்புறக்கணிப்பை ‘தொடர் பணிபுறக்கணிப்பாக’ மாற்றுவதா என்பது குறித்து இன்று மாலை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூடி இறுதி முடிவை அறிவிக்கவுள்ளனர்.
அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த 8ஆம் திகதி நள்ளிரவுடன் இலங்கை மின்சார சபை என்ற கட்டமைப்பு முடிவுக்கு வந்தது. நேற்று (09) முதல் மின்சார சபை 6 வெவ்வேறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.





