
எரிபொருள் விலையதிகரிப்பைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர் போக்குவரத்துக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள மேலதிக செலவினங்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலை போக்குவரத்துச் சேவைகளுக்கான மாதாந்தக் கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.





