
ஈரானின் புதிய உச்சத் தலைவர் நியமனம் குறித்த கேள்விக்கு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு நேர்காணலின் போது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்றும், “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று மட்டும் அவர் கூறியதாகவும் அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானுக்கு எதிரான போரை நிறைவுக்கு கொண்டுவரும் முடிவு, தாமும் நெதன்யாகுவும் இணைந்து எடுக்கும் ஒரு “பரஸ்பர” முடிவாக இருக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
“இது ஒரு சிறிய அளவில் பரஸ்பரமானது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன், ஆனால் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.





