உலகம்

பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதல்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

சைப்ரஸின் லிமாசோலுக்கு அருகிலுள்ள தளத்தில் நடந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும், தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, தளத்தில் இருந்த அத்தியாவசியமற்ற ஊழியர்களை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரித்தானிய அரசாங்கம் கூறியுளு்ளது.

 

குறித்த ட்ரோன் எங்கிருந்து வந்தது என்பதை பிரித்தானிய அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

 

“சைப்ரஸில் உள்ள ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரியில் உள்ளூர் நேரப்படி நள்ளிரவில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஆயுதப்படைகள் பதிலளித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

“பிராந்தியத்தில் எமது படை பாதுகாப்பு மிக வினைத்திறனுடன் இருப்பதாகவும், மக்களைப் பாதுகாக்க குறித்த தளத்தில் இருந்து பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சைப்ரஸில் உள்ளதளங்களுக்கு எதிர்-ட்ரோன் அமைப்புகள், F-35 ஜெட் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட கூடுதல் வளங்களை ஆயுதப்படைகள் நகர்த்தி வருகின்றன.

 

தற்காப்பு நடவடிக்கைகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஈரானிய ஏவுகணை தளங்கள்களை குறித்து வைத்து தெரிவு செய்யப்பட்ட பிரித்தானிய தளங்களில் இருந்து அமெரிக்கா தாக்க நடத்த அனுமதித்ததாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறிய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button