
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், கண்டி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் இன்று நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
தமது வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் 2 முதல் 3 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் நிலையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகை தருகின்ற நிலையில், நிலவும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கலன்கள் (Cans) மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற சந்தேகத்தினாலேயே வாகன உரிமையாளர்கள் இவ்வாறு அதிகளவில் எரிபொருள் நிலையங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.





