உலகம்

அலி கமெனி கொலை – கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமெனி ( Ayatollah Ali Khamenei) நேற்று (28.02) காலை நடைபெற்ற அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின்போது அவரது அலுவலகத்தில் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

அயதுல்லா அலி கமெனி “வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவர்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

 

மேலும் ஈரானியர்கள் “தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுங்கள்” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

இதேவேளை விமானத் தாக்குதல்களில் சுமார் 40 ஈரானிய அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில், ஈரான் கடுமையான பதிலடி கொடுக்கப் போவதாக எச்சரித்துள்ளது. அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ள பகுதிகள் மற்றும் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புடைய நாடுகளான டுபாய் (Dubai), தோஹா(Doha), பஹ்ரைன் (Bahrain) குவைட் (Kuwait) ஆகிய இடங்கள் பாதுகாப்பு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

 

இதேவேளை, ஈரான் முழுவதும் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் பெண்கள் பாடசாலையொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 108 பேர் உயிரிழந்ததாகவும் ஈரான் அரசு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button