
இலங்கையை சேர்ந்த 10 வயதான டாவி சமரவீர (Taavi Samaraweera), பஹ்ரைனில் நடைபெற்ற World Youth Contender மேசைப்பந்தாட்ட தொடரில் 11 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் செம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இது 2026ஆம் ஆண்டில் அவர் வென்ற முதல் சர்வதேச தங்கப் பதக்கமாகும்.
தற்போது 11 வயதுக்குட்பட்டோருக்கான மேசைப்பந்தாட்ட உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள டாவி சமரவீர, இறுதிப் போட்டியில் பஹ்ரைன் நாட்டின் யூசுப் அல்பன்னாவை (Yusuf Albanna) எதிர்கொண்டார்.
மிகவும் நிதானமாகவும், நம்பிக்கையுடனும் விளையாடிய டாவி, எதிராளியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
நுட்பமான விளையாட்டு திறன் (Technical Skill), கட்டுக்கோப்பான ஆட்டம் (Discipline), ஆடுகளத்தில் வெளிப்படுத்தும் முதிர்ச்சி ஆகியவை அவரை ஒரு சிறந்த விளையாட்டு வீரராக அடையாளப்படுத்தியுள்ளன.
அவரது இந்த வெற்றி, இலங்கை மேசைப்பந்தாட்ட வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகின்றது.





