
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பில் 2ஆவது முறை விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நேற்று டெல்லி விரைந்தார்.
கடந்த 12 ஆம் திகதி தவெக தலைவர் விஜய்யிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் குறித்து சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்தநிலையில் கரூர் சம்பவம் தொடர்பான இன்றைய சிபிஐ விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கேள்விகளுக்கு விஜய் அளித்த பதிலின் அடிப்படையில்தான் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெப்ரவரி முதல் அல்லது 2ஆவது வாரத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.





