உலகம்

உலக அரசியலில் மோதல் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் வரி விதிப்பு – கொந்தளிக்கும் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த எட்டு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

இந்த அதிரடி அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்திற்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

இதன்படி, பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer), ட்ரம்ப்பின இந்த வரி விதிப்புத் தீர்மானம் “முற்றாகத் தவறானது” என குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), ஒரு நட்பு நாட்டின் மீது இத்தகைய பொருளாதார அழுத்தங்களைப் பிரயோகிப்பதை “ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button